Tuesday, May 31, 2011

இந்த எண் வடிவுகள் இன்றைய நிலையில் உருத்திரிபு எய்தியுள்ள தமிழ் எண் வடிவுகள். அடிப்படையான இந்த எண் வடிவுகளைக் கொண்டு எவ்வளவு பெரிய எண்ணையும் எழுதிவிட முடியும். இவ்வெண்கள் தமிழகத்திலிருந்து நாவலந்தேயம் எனப்படுகின்ற பரதகண்டம் முழுவதும் பரவிச்சென்று; பின்னர் அரபியர் எனும் சோனகர் வழியாக மேலும் திரிபு எய்தி; அதன்பிறகு ஐரோப்பியர்க்கு எட்டின. ஐரோப்பியர் கைகளில் மேலும் திரிபாக்கம் பெற்ற வடிவமே இன்றைக்கு நாம் ஆங்கில எண்கள் என்று சொல்லிக்கொண்டுள்ள எண் வடிவங்களாகும். தமிழ் உணர்வும் தமிழ் வளர்க்கும் கடப்பாடும் உள்ளவர்கள் இவற்றை இயலுகின்ற இடந்தோறும் பயன்படுத்துவதும் பிறரையும் பயன்படுத்துமாறு ஊக்குவிப்பதையும் கடமையாகக் கொள்ளலாமே!

No comments:

Post a Comment