காலந்தோறும் கற்றறிந்தோர்
காத்தளித்த மரபுநெறி
சிலப்பதிகாரத்தில்:
மூன்றாஞ்
சங்கத்துச் சான்றோர் செய்யுள்களில் மிகச் சிலவான சமற்கிருத – வடசொற்கள்
இடம்பெற்றுள்ளன. அவையும் தொல்காப்பியத் தடத்தில் தப்பாமல் நிற்கின்றன. இம் மூன்றாஞ்
சங்ககாலத்துக்குப் பிற்பட்டதாகிய சங்கமருவிய காலம்ம் என்னும் பெரும்பாவியக்
காலத்தில் எழுந்த சிலம்பும் மேகலையும் அவற்றுக்கு ஒத்த பிறபிறவும் தொல்காப்பியர்
கட்டளையைத் தலைமேற்கொண்டு நிற்கின்றன.
அவ்வகையில், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று
பாரதிப் பெருமகன் உச்சிமேல் வைத்துக் கொண்டாடிய சிலப்பதிகாரப் பெரும்பாவியம் ஓர் மூன்று
அல்லது நான்கு விழுக்காட்டு அளவு வடசொற்களைப் கலந்துசெய்யப்பெற்றுள்ளது. அவை
சற்றும் தொல்காப்பிய வரம்பினை மீறவேயில்லை.
[ காண்க:- ஜினேந்திரன்
> சினேந்திரன், ஜினவரன் > சினவரன் [ நாடுகாண் காதை
: 177 - 180], அஷ்டமி > அட்டமி[அட்டமி ஞான்று: கட்டுரை காதை], ஜாதரூபம், ஜாம்பூந்தம் [சாதரூபம்,
சாம்பூந்தம்: ஊர்காண் காதை : 201-202], மகிஷன் > மயிடன் [மாமயிடன்
செற்று: வேட்டுவ வரி]
மணிமேகலையில்:
மணிமேகலைப் பாவியத்தின் ஆசிரியர் தண்டமிழ் ஆசான் மதுரை கூல வாணிகன்
சீத்தலை சாத்தனார் புத்த தருமத்தை விளக்குகையில் மொழிபெயர்க்க
இயன்ற இடங்களில் மொழிபெயர்த்தும், அவ்வாறு இயலாத இடங்களில் தமிழ் ஒலிமரபு கெடாமல்
ஒலிபெயர்த்தும், தொல்காப்பியர் இட்ட ஆணைவழி நின்று அந்நூலைப் படைத்துள்ளார்.
ÌÈ¢ôÀ¡¸ ºÁÂ ÅÆì¸¡¼ø Á¢ÌóÐûÇ ¾Åò¾¢ÈõâñÎ ¾ÕÁí§¸ð¼ ¸¡¨¾ ±ýÛõ ¾¨ÄôÀ¢Ä¡É 29¬ÅÐ ¸¡¨¾Ôõ, ÀÅò¾¢Èõ «Ú¦¸Éô À¡¨Å§¿¡üÈ
¸¡¨¾ ±ýÛõ ¾¨ÄôÀ¢Ä¡É 30¬ÅÐ
¸¡¨¾Ôõ ż¦º¡ü¸Ç¡¸¢Â ºÁü¸¢Õ¾ (ºí¸¾) -À¢Ã¡¸¢Õ¾
- À¡Ä¢ ¦Á¡Æ¢î ¦º¡ü¸û Á¢¸ô ÀÄÅ¡¸ Á¢¨¼ó¾ÉÅ¡¸ «¨Áó¾¨Å. «¨Å ÓüÈ¢Öõ
ż¦ÅØòÐ ´Ã£þò ¾Á¢ú ±Øò¾¡ø ÁðΧÁ «¨ÁóÐûÇ ÁÂí¸¡ ÁÃÀ¢ý ±ØòÐӨȨ ¬Ã¡öóÐ ¸¡Ïí¸û.
ஐம்¦ÀÕõ
À¡Å¢Âí¸Ùû (³õபெருங்காப்பியங்கÙள்) சிலம்பும் மேகலையும் தவிர பிற அனைத்தும்
வடபுலத்துத் தழுவல்களே. அவை வடதிரவிடவழிக் கதைகளே யன்றிò தென்றமிழ் மண்ணில் நிகழ்ந்த
வரலாற்றுப் படிவங்கள் அல்ல. அயலான அவை தமிழிற் புகுந்து புதுவடிவம் பெறும்போது,
தமிழ்மொழியின் மரபுவழாமல் வடிவுற்று நிற்பவை. அங்கே கிரந்தம் இல்லவே இல்லை.
ஐம்பெருங் காப்பியங்களைப் போன்றே ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் ஐஞ்சிறு பாவியங்களும்
தமிழ்வண்ணம் பெற்றுத் தனித்தகவோடு உள்ளன.
தமிழ்த்தலைமை தமிழர்தம் கையில் இருந்தவரை எந்த அயல்மொழிக்
குறுக்கீடும் இல்லை. முன்னை தமிழர்களால் எல்லா மொழிகளும் நட்புமுறையில் பார்க்கப்பட்டன,
பழகி உறவுகொள்ளப்பட்டன. நட்பில் நிகர்நிலை உண்டு; அடிமைநிலை இல்லை என்பதைச்
சீர்தூக்கி உணரவேண்டும். “ தன்
ஆயுதமும் தன்கைப் பொருளும், பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே” என்னும் அதிவீரராம பாண்டியரின் வெற்றிவேற்கை கூறுவது போல, இற்றைக்குள்ள தமிழ்த்தலைமை தமிழர்
அல்லாதவர்களின் கைகளில் நெகிழ்த்துவிடப்பட்டுள்ளதுதான் எல்லாக் கோளாறுகளுக்கும்
காரணமாக உள்ளது.
குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறை தமிழர்களின் வயமில்லை. அவற்றைத்
திரவிடரும் ஆரிய வழியரும் பெருமுதலீடு இட்டுக் கைவயப்படுத்தி உள்ளனர்.
தமிழ்மண்ணில் உண்மையான தமிழனுக்கும் தமிழுக்கும் வாழ்வில்லை; வல்லமையில்லை,
வளப்பமில்லை. கேவலம் திருமண அழைப்பில்கூட தமிழ அரசப் பண்பாட்டு உருவமைப்புகளுக்கு
மாறாக, மராத்திய அரசப் பண்பாட்டுப் படங்களே இடம்பிடித்துக் கொண்டுள்ளன.
எது தமிழ் அரசமரபு சார்ந்த உருவமைப்பு; எது அன்னிய அரசமரபு சார்ந்த உருவமைப்பு என்Àதைக்கூட இற்றை இளைய தலைமுறை அறியும் வாய்ப்புகள்
ஏறத்தாழ அடியோடு அற்றுப்போய்விட்டன என்றே கூறிவிடலாம். பகுத்தறியும் அறிவார்ந்த
தமிழறிவுத்திறம் பிறவற்றிலிருந்து தனித்து வேறுபிரித்து அறியப்படுவதில்லை.
இப்படிப்பட்ட எளிய பண்பாட்டு நடைமுறைகளில்கூட,
தன்னிலை இழந்து பிற மரபினரைச் சார்ந்துகிடக்கும் இவ்வேதுங்கெட்ட தமிழர்கள்,
எப்படித் தம் மொழியில் மட்டும் தெளிவான நிலையில் இருக்கமுடியும்? தம்மை மூவேந்தர்
வழிவந்தவர்கள் என்று கள்ளம்பேசித் திரிபவர்கள் ஒருவர்கூட இவ்வகையில் அதற்கான
மாற்றுரு கண்டிருப்பதாகத் தெரியவில்லையே!
வடபுலத்து மராத்தி, குசராத்தி, இந்தி வாழ்வியல் மயமாகி வருகின்ற இவர்களுக்கு அந்த வடவர்களின் போக்கில் தம்மை மாற்றிக்
காட்டிக் கொள்வதற்கு; அவ்வடபுÄத்தாரின் மொழியமைப்பும் போக்கும் அப்படியே
அடியொற்றிக் கொள்ளப்பட வேண்டியதாகி இருக்கிறது.
அப்படி அந்த உள்மனத்து மாறுதல்பெற்ற நிலையில்
இருப்பவர்களே உருவத்தில் மட்டும் தமிழர்களாக இருந்துகொண்டு; ஆரியமயமாக ஆகுவதற்குத்
துடிக்கின்றார்கள். அதற்கு மாறுபட்டு நிற்கும் உண்மையான தமிழர்களை அவர்கள்
எதிரிகளாகவும் எதுவும் தெரியாத, உலகம் புரியாத, பத்தாம் பசலித்தனமானவர்கள் என்றும்
இளப்பமாக நினைக்கின்றார்கள். உள்ளம் எப்படி, அப்படித்தான் செயல். எதையும் தன்மயம் ஆக்கிக்கொள்ளும் நம் முன்னோர்களின் தடத்திலிருந்து நம் காலத்தவர்களான நம்மில்
பலரும் நிலைபெயர்ந்து அல்லது நிலைபிறழ்ந்து நிற்கின்றனர் என்பதே உண்மையான நடப்பு
நிலவரமாகும்.
தொடக்கக் கால சமணரும்
இலக்கண வரம்பு மீறவில்லை
கடைச்சங்க காலத்திய
புலவர்களுள் சமணமதஞ் சார்ந்த புலவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள்
தமிழ்மரபியலுக்கு உட்பட்டே இயங்கினர். ஏனெனில், அப்போதிருந்த தமிழ்மன்னர்களும்
தமிழச் சான்றோர்களும் தமிழ்மரபியலில் நன்கு பதிந்துநின்றதேயாகும். எல்லாம்
தமிழ்மக்களின் கையில் – தலைமையில் அடங்கி இருந்த காரணத்தால் யாராலும் தம்
விருப்பம்போல் எதுவும் செய்துவிட முடியவில்லை என்பதே இன்னும் தெளிவான உண்மையான
காரணமாகும்.
அவ்வகையில், தமிழ்த்தலைமை தமிழப்புலவர் கையில் இருந்த
வரையிலும், எத்துணை அயலின மாந்தர் கூட்டுறவும், நட்பும், கருத்தீடும், என எதுவும் தமிழுக்கு
மாறாக இயங்கவில்லை, இயங்க முடியவில்லை. தமிழரசர் தம் சொந்த மண்ணிலேயே தம் ஆட்சியை
இழந்து; சிற்றரச நிலையில் ஒடுங்கி; நெடுங்காலம் அடிமைபபட்டுக் கிடந்த
காலத்தில்தான் அயலார்க்குத் தமிழில் தம் கைவரிசையைக் காட்டும் துணிவே பிறந்துள்ளது.
சங்கமருவிய
காலத்திற்குப் பிறகு, களப்பிரர் ஆட்சியில், தமிழ அரசர்கள் செயலற்றுக் கிடந்தாலும்,
தமிழ்ப்புலவர் பெருமக்கள் அந்த அயலார்தம் புகுத்தல்களை அடியோடு புறக்கணித்து நின்றனர்.
சும்மா அவரவர்தம் மத வட்டத்துக்குள் மட்டுமே அந்த
அயலவர்கள் கேட்பாரற்றுத் திமிர்ப்பாய் இருந்துள்ளனர். அவர்களின் மொழிகளான பாலி, பிராகிருதம் போன்றவற்றைச் சுந்தரமூர்த்தி நாயனார் கேலிசெய்துள்ளார். யாருடைய
மொழியில் யார்வந்து நாட்டாண்மை புரிவது; யாருடைய சமயத்தில் யார் வந்து குறுக்கீடு
செய்வது எனும் போக்கில் அப்பாடல் அமைந்துள்ளது.
இஃது இற்றைக்கு ஆயிரத்து இருநூறு (1200) ஆண்டுகட்கு முற்பட்ட
தமிழர்களிடத்தில் இருந்த தன்னிலைத் தெளிவு. நால்வர் வழிநடப்போர் என்று தம்மைப்
பெருமிதமாய்க் குறிப்பிட்டுக்கொள்ளும் உள்ளமுடையவர்கள், அந்த நால்வர்தம் மொழிக் கொள்கைக்கு
மறுதலித்து மாறுபட்டு நிற்பது என்ன காரணத்தாலோ! சிந்திப்பார்களா?
பத்தி இலக்கியம் படைத்த
பன்னிரு ஆழ்வார் இருபத்தேழு
திருமுறையாசிரியர்
இலக்கண வரம்பை மீறவில்லை
“ ¨ÀÂ
¯§Â¡ÌТø ¦¸¡ñ¼ ÀÃõÀçɔ - ¦Àâ¡úÅ¡÷ : ¯öÂ×ÄÌ : 1
“ §¿¡üÈ §¿¡ýÀ¢§Äý
Ññ½È¢Å¢§Äý
¬¸¢Öõ þÉ¢ ¯ý¨ÉÅ¢ðÎ ´ýÚõ
¬üȸ¢ü ¸¢ýÈ¢§Äý «ÃŢɨ½ «õÁ¡§É
§ºüÚò ¾¡Á¨Ã ¦ºó¦¿ æÎÁÄ÷
º¢Ã£ÅÃ
Áí¸Ä¿¸÷
Å£üÈ¢Õó¾ ±ó¾¡ö ¯ÉìÌ Á¢¨¸Âø§Äý «í§¸! ”
-
¿õÁ¡úÅ¡÷ : §¿¡üÈ
§¿¡ýÒ : 1
“ ¾£ÁÉí ¦¸Îò¾¡ö
¯É즸ý ¦ºö§Åý±ý º¢Ã£¾Ã§É”
-
¿õÁ¡úÅ¡÷ : §¸ºÅý¾Á÷ :
8
“ þãþ ¯ý¨É ±ýÛû¨Åò
¾¨É±ý þÕ˧¸º§É! ”
- ¿õÁ¡úÅ¡÷ : §¸ºÅý¾Á÷ : 9
ஆழ்வார் பாட்டில், ‘உயோகு’, ‘சிரீவரமங்கலநகர்’, ‘சிரீதரன்’, ‘இருடீகேசன்’, ... என்று வந்துள்ள தொல்காப்பிய நெறியினைக் கண்டுகொள்ளுங்கள். ¿¡ÂýÁ¡ர் ‘நமசிவாய வாழ்க’ என்றனரே அல்லாமல், ‘நமஷ்ஷிவாய’ என்று ஓதவில்லை,
எழுதவில்லை. ஆனால், இன்றுள்ள பிழையுணர்வாளர்கள் ‘நமஷ்ஷிவாய’ என்கிறார்கள்.
இது இந்தி முதலான வடபுல மொழிவழி வந்த புதிய தாக்கம்.
சங்கரன் என்று கூறாமல், ‘ஷங்கர்’ என்பதும், நாதன் என்று சொல்லாமல், ‘நாத்’ என்பதும், அரசு என்று கூறாமல், ‘ராஜ்’ என்பதும், ஈசன் என்று கூறாமல், ‘ஈஷ்’ (சத்தீஷ், ராஜேஷ், ஜக்தீஷ் ...) என்பதும், சேகரன் என்னாமல் ‘ஷேகர்’ என்பதும், ... அங்கிருந்து இங்கு புகுந்து கொண்டுள்ள
புகுத்தல்களே! – திணிப்புகளே!
இதனைக் குறித்து ஏனென்று கேட்டால், அதுதான் பரந்த
மனப்பான்மையாம்! அப்படியென்றால், அப்படிச் சொல்லாத – எழுதாத அந்த நால்வரும், அவர்களை ஒத்த ஏனைய இருபத்துமூவரும், ஆழ்வார்களும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களா? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?
தன்மொழிக் கேட்டில்
தலைநிற்கும்
பன்னிரு பாட்டியல் நூலும்
மீறவில்லை
பாட்டியல் என்னும் பெயருடைய பல நூல்களுள் பன்னிரு பாட்டியல் என்பது தலைமையானது. அது மிக்க புகழ்படைத்த
பழந்தமிழ்ச் சான்றோர்தம் பெயரையும் மிடைந்துகொண்டு; நலமும் தீங்குமாய்த்
தமிழியலைக் கூற முற்பட்டுள்ளது.
கேடுதரும் கூறுபல மிக்குள்ள அதுகூடத் தொல்காப்பிய
ஆணையை மதித்து நடந்திருக்கிறது. அது இருபத்தேழு நாள்மீனுக்கும் எழுத்துப் பாதீடு செய்கிறது. அந்த எழுத்துகள் ஒன்றுதானும் கிரந்த எழுத்தாய் இல்லை.
இக்காலத்தில்
பெயர்க்கு முதலெழுத்தாக வரும் எழுத்து அட்டவணைகள் நாள்மீன் வரிசைப்படி தரப்பட்டுப்
புழக்கத்தில் உள்ளன. அவை வடவெழுத்துகளோடு விரவியுள்ளன. ஆனால், பன்னிரு பாட்டியல் அவ்வாறு குழப்படி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒரு
குருக்களுக்குக்கூட ஒன்றும் தெரிந்திருக்கவில்லை, ஒரு கணியருக்குக்கூட அறவே
எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான், வடவெழுத்துகள் கலந்த கலப்பு அட்டவணை
நடமாட்டத்தில் இருந்துகொண்டு நம்மை நடைப்பிணமாக்கிக் கொண்டுள்ளது.
அப் பன்னிரு பாட்டியல் முற்றிலும் தமிழ்
எழுத்துகளைக் கொண்ட பெயர் முதல் எழுத்து அட்டவணையைத் தந்துள்ளது.
இது இன்றைய தமிழ்ப்புலவர்க்கும் தெரியாத செய்தியாக மறைந்துகிடக்கிறது.
தமிழ் ஒலிவரம்பை
மீறவேயில்லை
பேராசிரியர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார்,
சங்கர நமச்சிவாயர், மயிலைநாதர், ... என்ற தொடக்கத்தான
உரையாசிரியப் பெருமக்கள் பழம்பெரும் பேரிலக்கியம், பேரிலக்கணம் என்றுள்ள
பலவற்றுக்கும் உரை எழுதியுள்ளனர். அவ்வுரையில் கிரந்த எழுத்துகள் பயிலவில்லை.
இவர்களுள் சேனாவரையர் என்பவர் “ ஒரு சொல்லாயவழித் தமிழ்ச்சொல் Åடபாடைக்கண் செல்லாமையானும், வடசொல் எல்லாத்
தேயத்திற்கும் பொதுவாகலானும் இவை வட¦º¡ல்லாய் ஈண்டு வழங்கப்பட்டனவெனல் வேண்டும் ” என்று தமிழ்ச்சொல் வடசொல் என்பவற்றின் இயங்குதிறம்பற்றி, மிக்க அறியாமைபட
எழுதியிருந்தாலும்கூட, அவர்தம் உரையாக்கத்தில் வடவெழுத்துகளைப் பயன்படுத்தவில்லை
என்பது கவனிக்கத்தக்கது.
அவர் இருமொழிப் புலமை அதிலும் வடமொழிப்
புலமைமிக்கவர் என்ற போதிலும் அவர் தமிழ்மொழியில் எழுதுகின்றார் எனும் நினைவு
தவறாமல் – தப்பாமல் எழுதியுள்ள மொழியொழுங்கு யாவராலும் பின்பற்றத் தக்கது.
‘ஞாலம்
அளந்த மேன்மைத் தமிழ்’ என்று செம்மாந்து; பண்சுமந்த
பாடல்களால் சிறந்துநிற்கும் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தை அருளிச்செய்தவர் தெய்வச் சேக்கிழார்.
அவர் முப்போதும் மட்டுமன்றி எப்போதும் சிவனடி மறவாத திருவருட் சிந்தையர். அவர்தம்
நூலில் யாங்கணும் தொல்காப்பியச் சட்டம் மீறப்படவேயில்லை. அவர்தம் புலமைக்கும்
பத்திவளமைக்கும் மாசுகூற வல்லாரும் உளரோ?
கிரந்த எழுத்தைப்
பயன்படுத்தாத சேக்கிழார் என்ன இறைமறுப்புக் (நாத்திகக்) கூட்டத்தாரோ? திராவிடக்
கழக உறுப்பினரோ? இல்லை, மலேசியத் தமிழ்நெறிக் கழகத்து உறுப்பினரோ? கிரந்த
எழுத்துகளைப் பயன்படுத்தாதவர்கள் அனைவருமே இறைமறுப்பாளர்கள் என்று தம்மை மெத்தப்
பெரிய மேதாவிகளாகவும் பத்திமையாளர்களகாவும் பிறழ உணர்ந்திருக்கின்ற தமிழ்த்திறம்
புரியாத பேர்வழிகள் பலரும் இப்படித்தான் கூட்டத்தில் கூவிப் பிதற்றித்
திரிகின்றார்கள்.
அதற்கென்று
அவர்களுக்கு மலேசிய அரசினர் – குறிப்பாகக் கல்வி அமைச்சிலே ‘ஆவணம்’ வேறு
கொடுத்திருக்கிறார்களாம். என்னே! என்னே! அரைவேக்காட்டு அறிவாளித்தனங்கள்!
குறைகுடத்துக் கூத்தாட்டுத்தனங்கள்!
படிப்பது தேவாரம்
இடிப்பது சிவன்கோயில் என்னும் பழமொழிக்கு ஒப்ப, படித்துப் பிழைப்பது தமிழால் ஆனால்
இடிப்பது தமிழ்கோயில்(தமிழிலக்கணம்) என்பதற்கு உண்மையான நடப்பியல் விளக்கமாகி
இருப்பவர்கள் இத்தகையவர்களே! இத்தகைய இவர்களின் திருவற்றுத் திசைகெட்ட பேச்சுக்கும்,
தலையை ஆட்டிக்கொள்ளும் கூட்டத்தைப் பற்றிச் சொல்வதற்கு அறிவான சொல்லொன்றும்
கிடையாது! அவ்வளவு அறிவு! அவ்வளவு தெளிவு!
மெய்கண்ட நூல்மரபு
தொல்காப்பிய ஆணையை
மீறவில்லை
மெய்கண்ட சாத்திரம் என்று சிவநெறியை விளக்குகின்ற செந்துணிபு நூல்கள் பதினான்கில், ஒன்றுகூட தொல்காப்பியர் இட்ட; “ வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே ” என்னும் இலக்கணச் சட்டத்தை – கட்டுக்கோப்பை மீறவேயில்லை. மாறாக, அதனை
ஆக்கியோர் அனைவருமே தொல்காப்பியச் சட்டத்தை மிக உறுதியாகக் கடைபிடித்து நூலாக்கம்
செய்துள்ளனர்.
அவர்களின் நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய பலரும்
வடவெழுத்து இல்லாமல் தமிழ் எழுத்துகளாலேயே அவர்கள் கையாள விரும்பிய வடசொற்களைப்
பயன்படுத்தி இருக்கின்றனர். அவற்றுக்கு அண்மை காலத்தவர்களே வடவெழுத்து மிடைந்த
விளக்கவுரை எழுதியும் சொற்பொழிவுகள் செய்தும் வருகின்றனர்.
பண்டார நூல்மரபு
வரம்பை மீறவில்லை
பண்டார சாத்திரங்கள் எனப்பட்ட மெய்கண்ட
மரபுசார்ந்த சிவî ¦ºõமுடிபுச் சார்புநூல்களும் தமிழ வரம்பை மீறவில்லை.
Å¢øÄ¢À¡Ã¾õ À¡ÊÂ
Å¢øÄ¢Òòàá÷ Á£ÈÅ¢ø¨Ä
Å¢øÄ¢À¡Ã¾õ ±Éô §À¡üÈô¦ÀÚ¸¢ýÈ Á¡À¡Ã¾ á¨Äò ¾Á¢Æ¢ø À¨¼ò¾Ç¢ò¾ Å¢øÄ¢ôÒòதூá÷ ±ýÛõ À¡÷ôÀÉò ¾Á¢úôÒÄÅÕõ
¦¾¡ø¸¡ôÀ¢Â÷ ¬¨½¨Â Á£ÈÅ¢ø¨Ä. «Å÷ ºÁü¸¢Õ¾Óõ ¾Á¢Øõ ÅøÄ ¿¢¨ÈÒĨÁ¡Ç÷ ±ýÀÐ
ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. வடசொல்லும் பிறவும் அவர்தம் படைப்பில் நிரம்ப இடம்பெற்றிருப்பினும்
அவை தமிழ் மரபுக்குள் வந்து அமைந்து நிற்கின்றன.
சாமிநாத தேசிகர்ܼ
மீறவில்லை
இலக்கணக் கொத்து பாடிய சாமிநாத தேசிகர் பாஷை என்பதைப் பாடை என்றே எழுதினார். ‘ஐந்தெழுத்தால் ஒருபாடை
என்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே’ என்று ஐம்பத்தோர் எழுத்துகளைக் கொண்டுள்ள
வடமொழியோடு, முப்பது முதலெழுத்து படைத்துள்ள தமிழ்மொழியை ஒப்பிட்டுக்காட்டி; அவற்றுள்ளும்
ஐந்தெழுத்து மட்டுமே தமிழுக்கு உரிமையானவை, பிறவெல்லாம் வடமொழிக்கு உரிமையானவை என்று
தப்புக்கும் தப்பான தறுதலைத்தனமாக இலக்கணம் கூறத் துணிந்துவிட்ட அந்தச் சாமிநாத
தேசிகர்கூட தமிழ் ஒலிவரம்பை மீறத் துணியவில்லை.
இலக்கிய மூலவரும் மீறவில்லை
ஒமார், காதிர் என்னும் தமிழியல்புக்கு
ஒத்தமைந்த பெயர்களைக்கூட உமறு, காதிறு என்றுதான் எழுதினர். ‘சைத்’ என்னும் பெயரை சையது அல்லது செய்யது என்று எழுதினர். ‘ஷேக்’ என்பதை சேக்கு - செய்கு எனவும், ‘சித்திக்’ என்பதை சித்திக்கு எனவும், ‘முஹமத்’ என்பது முகம்மது /
முகமது எனவும், ‘இஸ்மாயில்’ என்பதை இசுமாயில் எனவும், ‘ஹசான்’, ‘ஹசேன்’ என்பவற்றை அசன்-அசான், உசேன் எனவும், ... இசுலாமிய தமிழர் மரபுபேணி வந்துள்ளனர்.
கிறித்துவத் தமிழர் தம் இறைவன் திருப்பெயரை இயேசு எனவும், ‘தாமஸ்’ என்பதைத் தோமையர் எனவும், ‘பெத்ரோ’ என்பதை பேதுரு எனவும், ‘டேவிட்’ என்பதை தாவீது எனவும், ‘இக்னியஸ்’ என்பதை இன்னாசி எனவும் ‘ஜோசப்’ என்பதை யோசேப்பு – சூசை, மத்தியுஸ் என்பதை மத்தேயு எனவும், ... எழுதியுள்ளனர்.
தேம்பாவணியும் சீறாப்புராணமும் கம்பர் காட்டிய
மொழிநெறியில் நின்றுள்ளன. தமிழின்பால் பற்றுள்ள தமிழர்கள் அயல்நெறி சார்ந்தபோதும் அயல்மொழிகளிலிருந்த
தம் மதஞ்சார்ந்த நூல்களை ஆக்கியுள்ளனர். தமிழின் மரபுமுறை அறிந்த ஆசான்களிடத்து
அருகிருந்து முறையாகக் கற்றவர்கள் முறையாக எழுதியுள்ளனர்.
இரட்டைப்
புலவரும் மீறவில்லை
ஆசுகவி பாடும் காளமேகப் புலவரும், ஒருவர் ஒருபாதியைப் பாடி மற்றொருவர் தொடர்ந்து மறுபாதியைப்
பாடி முடிப்பதெனும் பான்மைகொண்ட இரட்டைப் புலவரும், அந்தகக்கவி வீரராகவர் §À¡ýÈ À¢ü¸¡Äô ÒÄÅ÷ ¦ÀÕÁì¸Ùõ þ¾¨É மீறவில்லை,... இப்படியே
இன்னும் பற்பலரும் மீறவில்லை. அவர்கள் அனைவரும் காலத்தினால் வந்த மொழிக்
காவல்நெறியின் விழிப்பார்ந்த வீரர்களாகவும் காவலர்களாகவும் நின்றனர்.
திராவிட மாபாடியம் எழுதிய
சிவஞான முனிவரும் மீறவில்லை
கி.பி. 18ஆம் நூற்றாண்டில், ‘திராவிட மாபாடியம்’ என்னும் ‘சிவஞானபோதப் பேருரை’ அருளிய சிவஞான முனிவர் அவர்களும் தொல்காப்பியச் சட்டத்தை மீறவேயில்லை. வடசொற்களை ஆள விரும்பியபோது,
அவற்றைத் தமிழ் ஒலி வரம்புக்குள் வரப்படுத்தியிருக்கின்றார் எ-டு: சிருஷ்டி > சிருட்டி,
ஸ்திதி > திதி, சம்ஹாரம் > சங்காரம் என்று கம்பரைப்
போலத் தமிழ் ஒலிக்கு ஏற்பவே எழுதினார். அவர் வடமொழி தென்மொழி இரண்டிலும் ஒருநிகரான
பெரும்புலமை படைத்த பேரறிஞர்.




You are so interesting! I don't believe I have read through anything like that before. So good to discover somebody with genuine thoughts on this issue. Really.. thanks for starting this up. This web site is something that is required on the web, someone with a bit of originality!And also with our web site, Add Hunters you're going to benefit from our international usages!Items listed on Add Hunters include electronics, pets, cars and, vehicles and other categories including land and property. Feel free to visit our web site http://www.addhunters.com heavy machinery for rent in qatar
ReplyDelete