இருமொழி நட்பு
ஒருமொழி அழிவு
|
எண்
|
சமற்கிருதத்துக்குப்
மூவேந்தர், பல்லவர், விசயநகர மன்னர் அளித்த புரப்பு
|
தமிழுக்கு நேர்ந்ததெல்லாம்
இழப்பு
|
|
1.
|
கோயிலில் வழிபாட்டு மொழியாக மெல்லப் புகுந்தது.
|
கோயிலில் வழிபாட்டு மொழியாக இருந்து மெல்ல
வெளியேற்றப்பட்டது.
|
|
2.
|
தமிழை அண்டிவந்து வழிசார்ந்து வளம்பெற்ற
வரலாற்றினைத் தலைகீழாக மாற்றிக் கூறிவருகிறது.
|
“சமற்கிருத மொழியை அடிசார்ந்து உருவானது தமிழ்” என்ற தப்பான வரலாற்று மறைப்புக்குத் தமிழ்மொழி ஆளாகிவிட்டது.
|
|
3.
|
சமற்கிருதம் உயர்ந்தமொழி, தெய்வ மொழி என்ற
பொய்யுரை பரப்பி விடப்பட்டுள்ளது.
|
தமிழ் பேய்மொழி, நீசமொழி, சூத்திர மொழி என்ற அறிவற்ற கருத்து பரப்பிவிடப்பட்டுள்ளது.
|
|
4.
|
சமற்கிருத மொழிதான் இந்திய மொழிக்கெல்லாம் மூலத்தாய்மொழி எனும் மாயக்கருத்து
புனைந்துவிடப் பட்டுள்ளது.
|
தமிழே இந்திய மொழிக்கெல்லாம் மூலத் தாய்மொழி
என்னும் மொழியில் வரலாற்று உண்மை மறைக்கப் பட்டுள்ளது.
|
|
5.
|
சொந்த எழுத்து இல்லாத சமற்கிருத மொழியின்
எழுத்துதான் தமிழ் எழுத்துமுறைக்கு மூலம் என்ற பிழைக்கருத்து வளர்ந்திருக்கிறது.
|
எல்லா எழுத்துமுறைக்கும் தமிழ் அசையெழுத்து முறையும், முதல் எழுத்து முறையுமே மூலம் எனும்
உண்மை மறைக்கப்பட்டுக்கிடக்கிறது.
|
|
6.
|
கிரந்த எழுத்தும் தேவநாகரி எழுத்தும்
சமற்கிருதவாணர் தாமாக உருவாக்கியவை என்றும், அவையே எல்லா எழுத்துமுறைக்கும்
மூலமுதல் என்றும் பிழைநம்பிக்கை
வளர்க்கப் பட்டுள்ளது.
|
கிரந்த எழுத்திலிருந்து தமிழ் எழுத்து முறை
ஏற்பட்டது என்ற வஞ்சகக் கருத்து மேகமூட்டத்தில்
தமிழ் உருத் தெரியாமல் மங்கிக்கிடக்கிறது.
|
|
7.
|
இந்திய நாகரிகத்தின் மூலம் ஆரிய – சமற்கிருத
நாகரிகம் என நம்ப வைக்கப்பட்டுள்ளது. வடக்கே காந்தாரம் ஆகிய ஆப்கானித்தான்
தொடங்கி, சிந்து, கங்கை, தொழுநை(யமுனை), சரசுவதி என்று வடக்கேயிருந்து தெற்கே
பரவியுள்ளது என்று உண்மை திரித்துக் கூறப்படுகிறது.
|
இந்தியா எனப்படும் நாவலந்தேயத்து
நாகரிகத்துக்கெல்லாம் குமரிநாட்டுத் தமிழ நாகரிகமே மூலம் எனும் உண்மை
ஒளிக்கப்பட்டுள்ளது. தமிழப் பெரு நாகரிகங்கள்
குமரி, பொருநை, வைகை, காவிரி, கோதாவிரி, சிந்து, உலோத்தல், மெகர்கர் முதலான பெருந் தலங்களில்
தெற்கேயிருந்து வடக்கே பரவிச் சென்றது என்னும் வரலாற்று உண்மை மூடிமறைக்கப்
பட்டுள்ளது.
|
|
8.
|
தமிழ்மொழிக்கு எதுவுமே இல்லை. சமற்கிருத
மொழியினிடத்தில்தான் அதன் எழுத்து, சொல், கருத்து, இலக்கியம், சமயம் என எதை
எடுத்துக்கொண்டாலும் இரவல் பெற்றுள்ளதாகக் கதைதிரிக்கப் பட்டுள்ளது.
|
தமிழ்மொழியில் தேவையில்லாமல், புதுமை
மோகத்திலும் மயக்கத்திலும் சமற்கிருத சொற்களைப் புகுத்திக் கொண்டது. அதனை
உயர்ந்த அறிவுத் திறனுக்கும் ஆற்றலுக்கும் அடையாளமாக எண்ணிச் சிறுமை
பட்டது.
|
|
9.
|
தமிழ் அரச குடிகள் ஆரிய முனிவர் வழிசார்ந்த
குடிகள் எனத் தமிழ் இனத்தோற்ற மூலத்தை மறைத்தல். அதேபோல மாற்றவோ மறுக்கவோ
முடியாத செல்வாக்கு பெற்ற பெருந்தமிழ் அறிவர்களை ஆரியர் என இனந்திரித்துப்
பெயர்மாற்றிக் கூறி அறிவாளுமைக்குரிய அறிவுமரபு உரிமையைப் பறித்துக்கொண்டது.
|
தமிழ் இனத்தில் தமிழ் இனத் தோற்றமுடையோர்
இயற்றிய நூல்களை ஆரியவழி வந்தவை என்று அடிமைகூறிக் கொண்டது. சமற்கிருத கல்விக்கு
உயர்கல்வி நிலையங்களை உருவாக்கித் தந்ததுபோல், தமிழ்க்கல்விக்கு ஏற்பாடு
செய்துதரவில்லை. பல்லவர் காலத்தில் புத்த மதம் ஓங்கியபோது பாலி, பிராகிருத
மொழிகளே காஞ்சி மாநாகரில் போற்றிவளர்க்கப்பட்டன. அதேபோல, பிற்காலச் சோழர்
காலத்தில் சமற்கிருதக் கல்விக்குக் கடிகைகள் உருவாக்கித் தரப்பட்டன. தமிழுக்கு
என்று எதுவுமே ஏற்படுத்தப் படவில்லை.
|
இப்படிப்பட்டப்
பல்லவ, பிற்காலச் சேரசோழபாண்டிய அரசர்கள் ஆரிய மயமாகிவிட்ட நிலையில், தமிழுக்கு
எல்லாம் இழப்புகளாக மாறத் தொடங்கின. அந்த இழப்புநிலை இன்றளவும்
தொடர்ந்துகொண்டுள்ளது. ஒருவாறு கடின முயற்சிகளுக்குப் பிறகு ஒருசில உரிமைகளும்
வாய்ப்புகளும் போராடிப் பெறப்பட்டுள்ளனவே தவிர, எதுவும் இயல்பான சட்ட அதிகாரப்படி
நடக்கவில்லை, கிடைக்கவில்லை.
இவற்றையெல்லாம்
ஒட்டுமொத்தமாகத் தேவநேயப் பாவாணர் தாம் இயற்றியருளிய தமிழ் வரலாறு எனும் மீட்சிப் பெருநூலில்
கடைக்கழகம் ஆகிய மூன்றாஞ் சங்க காலத்துக்குப் பிறகு தமிழ் சிதைந்த வகைகள் என்றொரு
பெரிய பட்டியலையே திரட்டியளித்துள்ளார்.
அவற்றை
முறையே, மொழிச்சிதைவு,
கலைச்சிதைவு, நூலழிவு, நூலிழிபு, செய்யுள்ளிழிபு, இலக்கணக் கேடு, சொற்சிதைவு, சொல்
வழக்கழிவு, சொற்பொருள் இழப்பு, சொல்லிழிபு, சொற்றிரிபு, எழுத்துத் திரிபு,
தமிழ்க்கல்விக் குறைவு, தமிழ்ப்புலவர்க்குப் பிழைப்பின்மை, என்று பழைமையிலிருந்து எடுத்துக் காட்டியிருக்கும் அதேவேளையில், புதுமை
பலவும் பூத்துக் குலுங்கிவரும் இற்றை அறிவியல் தொழில்நுட்பம் ஓங்கியிருக்கும்
காலத்தில் நடைபெற்றுவரும் தமிழ் ஒழிப்புத் திட்டங்கள் குறித்தும் வெளிப்படையாக
எடுத்துக்கூறியுள்ளார்.
அவற்றுள் ஆங்கிலம்-இந்தி-தமிழ் எனும் மும்மொழிக் கல்வித்திட்டம், வரலாற்று முறையைத் தழுவிச்செல்லாது, வண்ணனை முறையைத் தழுவிச்செல்லும் வண்ணனை மொழிநூல் கல்விக் கொள்கையும் குறிப்பிடத்தக்கன.
இவற்றுக்குத்
தொடர்ச்சியாக அமைந்த மறைப்பு வேலைகளைக் குறித்தும் அவர் அஞ்சாமல்
எடுத்துக்காட்டியிருக்கின்றார். அவற்றை ஒவ்வொரு தமிழனும் பொறுத்துப் படித்துத்
தெளிய வேண்டும். ஆனால், அந்தப் பக்கமே போகாத போக்கிலிகளாகவே மீப்பெரும்பான்மைத்
தமிழ மாந்தரும் கல்வியாளர்களும் இருந்துவருகின்றனர். அது சமற்கிருதவாணர்க்குக்
கிடைத்தற்கரிய வாய்ப்பாக இருந்துவருகிறது.
இனி,
அந்த மறைப்பு வகைகளும் அவர் கூறுமாறு காண்போம். அவை முறையே, தமிழ்மறைப்பு, தமிழ்நாடு
மறைப்பு, தமிழ இனமறைப்பு, தமிழ்நாகரிக மறைப்பு, தமிழ்க்கலை மறைப்பு, தமிழ் முதனூல்
மறைப்பு, தமிழ்த்தெய்வ மறைப்பு, தமிழர் சமய மறைப்பு, தேவார மறைப்பு, பொருளிலக்கண
மறைப்பு, தமிழ்ச்சொல் மறைப்பு, தமிழ்ச்சொற்பொருள் மறைப்பு, தமிழ்க்கருத்து
மறைப்பு, தமிழ் எழுத்து மறைப்பு, முக்கழக (முச்சங்க) மறைப்பு, தமிழ் வரலாற்று
மறைப்பு எனப் பதினாறு (16) வகையான மறைப்புகளுக்குத் தமிழும் தமிழரும் தமிழ
மரபியலும் ஆளாகி அல்லற்பட்டு அலமந்துகிடக்கும் அவலநிலையை உள்ளம் நொந்து வெந்து உரைக்கின்றார்.
இவற்றுள் ஒன்றுகூடவா ஏனைய தமிழ மேதையருக்குப்
புலப்படவில்லை. அடப் பாவிகளா! நீங்கள் என்னதான் எப்படித்தான் தமிழ்படித்தீர்கள்-படிக்கிறீர்கள்-படிப்பிப்பீர்கள்?
இவ்வளவும்
சமற்கிருதத்துக்கும் தமிழுக்கும் கடந்த
3000 ஆண்டு காலமாகத் தொடங்கி நடந்துவருகின்றன. அதிலும் குறிப்பாக மூன்றாம் தமிழ்க்கழகம்
ஒழிந்துபோன பின்னர் – கடந்த 1800 ஆண்டு காலமாக பெரிய இழப்புகளைத் தமிழும்
தமிழரும் அடைந்து தம் அகத்தில் முற்றுமாக வீழ்ந்திருக்கின்றனர், புறத்தில்
ஒருபாதித் தமிழர் மட்டுமே வீழ்ந்துபோயிருக்கின்றனர். மீதமுள்ள மறுபாதிதான்
சமற்கிருத மயமாகி ஆரியத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது.
தன் சொந்த மொழியையும் இனத்தையும் தொடர்ந்து
கெடுத்துக்கொண்டு அந்த அடிமைப் பிழைப்பையே பெருமையாகப் பேசிக்கொண்டும்
பூசிக்கொண்டும் வாழாமல் வாழ்ந்து வருகின்றது. அதிலே தமிழ்நலம் அறவே அறியாத அறிவடிமைத்
தமிழ்ப் பெண்ணினத்தின் பங்கு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அஃது ஏன் அவ்வாறு
இருக்கின்றது?
வட இந்தியாவில் நடந்திருப்பது என்ன?
தென்னிந்தியாவிலும் அதுதான் நடந்திருக்கிறது!
இதோ,
வடநாட்டு ஆய்வாளர் மகாவீர்
சங்லீகர் அவர்கள் வெளிப்படுத்திரும் உண்மைகள்.
தொடக்கத்தில், வடமொழி எனும் பெயரில் குறிப்பிடப்பட்ட வட்புலத்து மொழி வடதமிழ் ஆகிய
பிராகிருதமேயாகும். அதன் ஆளுமைவீச்சு ஒடுக்கமுற்ற பின்னர், அதனிடத்தில் அதே பெயரில் சமற்கிருதம்
என்னும் தொடர்ந்து சங்கத மொழி, வடமொழி என்னும் பெயரால் தென்னாட்டுத் தமிழர்களால்
குறிப்பிடப்பட்டது.
அந்தச் சமற்கிருதம் எப்படிப்பட்டது என்பதைப்
பிராகிருத மரபுவழி வந்துள்ள மகாவீர் சங்லீகர் அவர்கள் குறிப்பிடுவதைக் கூர்ந்து பார்த்து
உணர்ந்துகொள்க.
அஃது
(சமற்கிருதம்) என்றுமே
பொதுமக்கள் மொழியாக இருந்ததில்லை
It was Never
the Language of Common People
Some Facts About Sanskrit
Language:
1. Sanskrit is not the oldest language of India, Tamil
is. Check this in any standard GK book for competitive exams or any standard book
of linguistics.
2. The oldest inscriptions in India are in Prakrit languages, not
in Sanskrit.
3. Bhagwan Mahavir and Goutam Buddha gave their sermons in
Prakrit languages and they didn't speak anything in Sanskrit. The real reason
of this is that Sanskrit did not exist at the time of them. If Sanskrit existed
that time, they would have spoken in Sanskrit with Kings like Shrenik Bimbisar
and at least with their Bramhin disciples.
4. The so called Sanskrit of Vedas is different language from
the Sanskrit of later period.
5. Later Jain Acharyas, who were of Bramhin origin used Sanskrit
for writing Jain texts. They gave a Vedic touch to Jain philosophy in their
writings. You can see it clearly in Acharya Jinsena's literature, who was a
born Vedic Bramhin and who turned south Indian Jainism into ritualistic and
Vedic like Jainism.
6. Prakrit Jain literature is loyal with original Jain
philosophy, Sanskrit Jain literature is not. Again check this by comparing Acharya
Kundkundas Prakrit texts with Acharya Jinsena's literature.
7. Sanskrit had not a script for writings as they did not
believe in writing. Later they adopted Devnagari script which was invented by Nagvanshi
people of Shramanic tradition.
8. Today's most of the Indian languages are of Prakrit origins. Sanskrit
is also of Prakrit origin. So Sanskrit is not mother of languages like Hindi,
Marathi, Bengali, Gujarati, Punjabi etc, but she is just a sister of them.
Sanskrit has no children.
9. Sanskrit was never a language of Masses.
- Mahavir Sanglikar/மகாவீர் சங்லீகர்
சமண மதம் ஆகிய சைன மதத்தில், சங்கதம் எனப்படும் சமற்கிருத
மொழியைப் பாகதம் என்னும் பிராகிருத மொழிக்குப் பகரமாகப் பயன்படுத்தத் தொடங்கியது எப்போது
என்றால், அதிலே ‘சினசேனன்-JinSena’ முதலிய ஆரியப் பார்ப்பனர் வழிவந்தவர்கள் குருமார்களாக இடம்பெறத் தொடங்கிய பிறகுதான் என்பது மேற்காணும் குறிப்பிலிருந்து நாம்
நன்றாக விழித்துப் பார்த்து எச்சரிக்கையாக உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.
தென்னாட்டுக்கு வந்து பரவியிருந்த சமண நெறியில்,
பல்வகைச் சடங்குப் போக்குகளை உண்டாக்கிவிட்டவர்கள் இந்தப் பார்ப்பனக் குருமார்களே
என்பதும் மிக நன்றாக கவனித்து விழிப்புப்பெற வேண்டிய மற்றொன்றாகும். புத்த
நெறியிலும் இப்படித்தான் ஆரியப் பார்ப்பனக் குருமார்கள் ஊடுருவி, முதலில் அங்கு ஏற்கனவே
ஆளுமை பெற்றிருந்தவர்களின் நன்மதிப்புக்குப் பாத்திரமாகிப் பின்னர் போகப்போகத் தம்
சூழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர்.
ஆளுமையைப் பெறுதல் அல்லது கைப்பற்றுதல் அல்லது தம் வயப்படுத்துதல் என்பது மட்டுமே இதிலே
ஆரியப் பார்ப்பனர் அரச வட்டாரங்களின் தயவினோடு தக்கவைத்துக்கொள்ள முயன்று வந்துள்ள
- இடையறாத எங்குமே இல்லாத பெரிதிலும் பெரிய முயற்சியாக இருக்கிறது. அவ்வப்போது
அவர்களிடையே தோன்றிய ஓரிரு நல்லோர்களையும், அவர்களுக்கு அயலான பிராகிருதரிடையே
தோன்றிவந்த அருள்மிக்க பெரியோர்களையும் அவர்களின் பொறுத்தருளும் பொறுமையையே
கருவியாக்கி இவர்கள் தம்மையும் தமது நிலையினையும் தலைமுறைதோறும் வலுப்பெறச்செய்து
வந்திருப்பது இதன்வழியாக நன்கு புரியும்.
அவ்வளவு
தொலைவுக்குப் போவானேன்? நம் காலத்துக்கு மிக அண்மிய காலத்திலே வாழ்ந்த
வள்ளல்பெருமானார்க்கே இதுதானே பட்டறிவாக இருக்கிறது. எவ்வகையிலும் பேதமுறாது;
எல்லா உயிர்களையும் பகைநட்பு பாராது நேசிக்கும் வஞ்சனைக்கு ஒருசிறிதுகூட இடமில்லாத
ஆன்மநேயத்தால் சமரச சன்மார்க்க நெறியை வளர்த்தருளிய வள்ளல்பெருமானர்க்கு அணுக்கமான
பலருள் ஒருவராக இருந்த ஒரு பார்ப்பனத் துறவியிடத்தில் அவருக்கும் மேற்சொசன்ன நிலைமைதான்
ஏற்பட்டுள்ளது.
எந்த நலத்தைவிடவும் ஆரிய வழியினர்க்குத் தம்
சொந்த நலமே பெரிது என்பதை நமக்குப் பல்லாயிரம் தடவை புரியவைத்தாலும் நாம்தான்
புரிந்து கொள்வதில்லை. அப்படியே புரிந்துகொண்டாலும் நினைவாய் விழிப்பாய்
இருப்பதில்லை. இது நம் குற்றம்தான் அல்லவா? ஏமாறுகின்றவர்கள் இருக்கும் வரையிலும்
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
அதனால், அருளாளராகிய வள்ளலார் மனம்நொந்துபோனார். தம்
அணுக்கர் ஒருவரிடத்தில், அவரோடு (வள்ளலாரோடு) நன்கு பழகியும் தம் பார்ப்பனத்தனத்தை
நேரம் பார்த்துக் காட்டிய பட்டணத்துச் சவாமிகள் என்னும் பார்ப்பனத்
துறவியை எங்காவது பார்க்க நேர்ந்தால், அத் துறவியாரிடத்தில் ‘பாலும் நீரும் போலும்
பார்ப்பன சிநேகம்’ என்று தாம் (வள்ளலார்) கூறியதாகக் கூறுமாறு
கேட்டுக் கொண்டார்.
இதே போலத்தான், ஆரிய மயமாகியிருந்த ஆடூர் சபாபதி ஆச்சாரி என்ற சிவாச்சாரியாரும் வள்ளலாருக்குப் பேரதிர்ச்சியைத் தந்திருக்கின்றார். இந்த
நிகழ்ச்சிகள் மேற்படி, சமணபுத்த நெறிகளில் ஊருவி அவற்றை உருக்குலைத்திருப்பது
போலவே, வள்ளலார் காட்டியிருளிய செந்தண்ணெறி என்னும் சன்மார்க்கத்திலும் உருத்திரிப்பு
செய்திருக்கிறது.
ஆக, இப்படி எந்தக் காலத்திலும் தாம் பிறந்த
இனத்தின் ஆளுமைக்காகவே ஆரியப் பார்ப்பனர்கள் நல்வழியிலும் அல்வழியிலும் என உள்ள
எல்லா வழிகளிலும் முயன்றுவருகின்றார். இவ்வுண்மையினைத் தெள்ளித் தெளிவதற்கு
சிந்தனைத்திறன் அற்றவர்களாக மற்றவர்கள் உள்ளனர் என்று கூறிவிட முடியாது.
உலக மக்களுள் தம் மொழியை நிலைசெய்துவைத்து; அதன்
வழியாகத் தம்மை நிலைசெய்துகொண்டு; வெற்றிபெற்றிருப்பவர்களுள்ளும் தலைமையாக விதந்து
குறிப்பிடத் தக்கவர்கள் ஆரிய மக்களேயாவர். அவர்கள் தம்மையும் தம் நிலையினையும் மிக
நன்றாக உணர்ந்தவர்களாகக் காலந்தோறும் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களையும் மற்றுள்ள
துறைசார்ந்த மாற்றங்களையும் தம்வழிப்படுத்திக் கொண்டதற்கு அடிப்படைக் கருவியாகக்
கொண்டது தம் சமற்கிருத மொழியின் செம்மை கெடாத கட்டுக்கோப்பு என்பதுதான் ஆய்வறிஞர்கள்
கண்டறிந்துள்ள முதன்மையான மனவியல் கூறாக இருக்கிறது.
தாய்மொழியைத் தற்காத்து நின்றவர்கள்
வென்றிருக்கிறார்கள்; தாய்மொழியைத் தவறவிட்டு வந்துள்ளவர்கள் தறிகெட்டுத்
தரங்கெட்டுப்போவார்கள் என்பதற்கு ஆரிய மக்களும் தமிழ மக்களுமே நல்ல இருமுனைச்
சான்றுகளாக இருக்கிறார்கள். பட்டறிவுக்குமேல் பட்டறிவு பெற்றபின்னரும் தம்வழிப்
பிழையினைத் தமிழ மக்கள் உணர்ந்து திருத்தம்பெறாமல், சும்மா பிறரை
நொந்துக்கொள்வதால் எந்தப் பயனுமில்லை.
இன்று வரையிலும், எல்லா நிலையிலும் இப்படித்தான்
இருக்கிறது. இதைக் குறித்து வாயைத் திறக்க முற்பட்ட அக் கணத்திலேயே, ஏதோ பெரிய
ஒற்றுமைக் கேட்டை ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, இந்து, இந்தியப் போர்வையில்
புகுந்துகொண்டு ஆரியப் பார்ப்பனர் குரல்கொடுப்பர்.
அந்தக் குரலை அப்படியே இறைத்திருமொழி என நினைத்து;
ஒன்றும் அறியாத பேதைத் தமிழர்களும், ஓரளவு ஏதோ பொத்தாம் பொதுவாகத்
தெரிந்துகொண்டுள்ள அரைகுறைத் தமிழர்களும் அந்தப் பார்ப்பனக் குரலோசை முழக்கம் மூழ்கி
மறைந்திடும் வகையில், இவர்கள் தமது குரலோசையைச் சொந்தத் தாய்மொழிக்கு எதிராகத்
திருப்பி முழக்கமிடுவார்கள்.
தொடங்கிவிட்டதோடு சரி, ஆரியப் பார்ப்பனர் வேலை
முடிந்துவிடும். ஆனால், அன்று தொடங்கிவிட்ட தமிழ மாக்களோ தம்முள் உலகம்
உள்ளளவுக்கும் ஓயமாட்டார்கள். அந்தச் சிக்கல் எழும்போதெல்லாம் இந்தப் பேதைத் தமிழ
மாக்கள்தான் பெரிய குரல்கொடுப்பர். ஆரியப் பார்ப்பனர் சும்மா இருப்பர்.
தேவைப்பட்டால் மட்டுமே எரியும் நெருப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றுவர். எங்கே
எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து செயலாற்றுவதில் நிகரறத்
தேர்ந்துவிட்டார்கள். அவர்கள் அலட்டுவதே கிடையாது. எங்கேயோ கொட்டுவார்கள் எங்கேயோ
நெறிகட்டும். அவ்வளவு அறிவார்ந்த சூழ்ச்சி வல்லுநர்கள்!
இந்த மனவியல் உண்மையினை எந்தத் தமிழக் கொம்பனும்
சிந்திப்பதே இல்லை. என்னவோ, இவர்களே ஆரியர்கள் என்பதைப் போல பேசுவார்கள்,
எழுதுவார்கள். என்னதான், குளிப்பாட்டிச் சீராட்டினாலும் நாய்க்குத் தரக்கூடிய இடம்
என்னவாக இருக்கும்? மிக மதிப்பார்ந்த நாய்களாக அடுத்த இனத்தவர்களின் காலடியில்
கிடப்பதே பிறவிப் பேரின்பமாக எண்ணிக் களிக்கின்ற மனநிலையில்தான் மீப்பெரும்பால்
பேதைத் தமிழ மாக்கள் இருக்கின்றனர்.
This comment has been removed by the author.
ReplyDelete