Saturday, July 13, 2013


வாய் முழக்கும்
மன அழுக்கும்


¿¡õ¾Á¢Æ÷ ¿¡õ¾Á¢Æ÷ ¿¡õ¾Á¢Æ÷ ±ý§À¡õ
      ¿¡É¢Äò¾¢ø šɸò¾¢ø ¿¡õ¾Á¢Æ÷ ±ý§À¡õ

¿¡õ¾Á¢Æ÷ ¿¡õ¾Á¢Æ÷ ¿¡õ¾Á¢Æ÷ ±ý§À¡õ
      ¿øÄ¾Á¢ú ÁÃÀ¡§Ä ¿¡õ¾Á¢Æ÷ «È¢ó§¾¡õ

¿¡õ¾Á¢Æ÷ ¿¡õ¾Á¢Æ÷ ¿¡õ¾Á¢Æ÷ ±ý§À¡õ
      ¿¡É¢Äò¾¢ø ¿¡õ¾¡§É ӾĢÉÁ¡öô À¢È󧾡õ

¿¡õ¾Á¢Æ÷ «ýÚÁ¢ýÚõ ±ýறும்நாம் ¾Á¢Æ÷
      ¬õ!«ñ§½ ¿£í¸û¡÷? ±ýÉÜð¼õ «ñ§½?


சாதியை ஏற்கும் உள்ளம்
      தமிழை ஏற்கா)து) அறிவாய்!

தமிழை ஏற்கும் உள்ளம்
      சாதியை ஏற்கா(து) உறவாய்!

சாதி ஒழித்திடல்; நல்ல
      தமிழை வளர்த்திடல் என்றே

ஓதினார் பாவேந் தர்அன்றோ!
      ஓதியும் பேதை நீரோ!

உள்ளம் நிற்பது எதன்மீது?
      மூழ்கிப் பார்உன் மனக்கடலில்!

கள்ளம் பேசல் எதற்காக?
      காற்றில் சாற்றல் எதற்காக?

செல்லம் பேசிச் சிரிப்பலைமேல்
      ஏறிச் சென்று சிதறுதல்ஏன்?

உள்ளம் இருக்கக் கள்ளம்ஏனோ?
      கள்ளம் என்றும் உள்ளம்ஆமோ?


பொங்குதமிழ் பேசுகின்றாய் பொங்குதமிழ்ப் பண்ணிசையும்
பொங்கலாகப் பாடுகின்றாய்ப் பொங்கிப் படைக்கின்றாய்
அங்குத் தமிழைப்போல் அங்குத் தமிழனைப்போல்
தங்கமாகத் தோன்றுகின்றாய் தன்னிகர்த்து நீண்டுநின்றாய்!

அங்கிருந்து சற்றுத் திரும்பிநின்று நீயேதான்
கொங்குதமிழ் பேசுகின்றாய் கொங்குசங்கு ஊதுகின்றாய்
கொங்கன்நான் கொங்கணவன் வன்னியன்நான் என்கின்றாய்
பொங்கழல்சேர் வேள்வியின் குண்டத்தில் வந்தவன்
உங்கள்இன முன்னவன் பல்லவன்நீ என்கிறாய்!

இங்கேநீ யார்சொல்? எப்படிநீ சத்திரியன்?
எங்கேநீ? யார்யார்யார் நீ?-சும்மா ஏன்நீ
சங்கத் தமிழ்முழக்கம் செய்துஎம்மை ஏய்க்கின்றாய்
துங்கத் தமிழும் சாதியும் சேர்வதில்லை
நல்லிசை தந்து மயங்கவைத்துப் பின்புமிகு
வல்லிசை தந்து-அசுண மாவினைமாய்த் துப்பற்றும்
கொல்லிசை வேட்டுவன்போல் கொள்கை நடிப்பாகச்
சொல்லிச் செயல்வேறாய் தோற்றம் தருகின்றாய்!

ஆறுகோடி மக்களென்றாய், அப்படியே நாங்கள்
ஆறுகோடி உள்ளும் இரண்டரைக் கோடிதேறும்
வன்னியச் சாதி; அரசாண்ட மூவேந்தர்
பின்னிவந்த பல்லவர் என்றுநீங்கள் சொல்வதென்ன?

பல்லவன்நீ என்றக்கால் மூவேந்தர் ஆகமாட்டாய்!
மூவேந்தர் நீயென்றால் பல்லவனாய் ஆகமாட்டாய்!
மூவேந்தர் ஆட்சிவீழ்த்தி ஊன்றியவர் பல்லவர்கள்
மூவேந்தர் மாட்சிகெட வந்தவர்கள் பல்லவர்கள்!
அன்னியரே பல்லவர்கள் வன்னியர் ஆகலாம்
எண்ணிநான் பார்க்கையில் பல்லவர்கள் என்பவர்கள்
திண்ணமாகச் செந்தமிழர் அல்லரே! வாதாபி
வென்றவன் வரலாற்று மாந்தன்மா மல்லன்
மகேந்திர வர்மன் அவன்தமிழன் தானோ?
மகேந்திரன் தான்வீர வன்னியனோ? ஏடா!
வரலாற்று மாந்தனா வன்னியன்! மூல
வரலாற்று மாந்தனா பல்லவன்! மூல
வரலாற்றைத் தென்குமரி நாட்டில் கூறு-கால
நிரல்மாற்றிக் கூறாதே நேர்மையின்றிப் பேசாதே!

தெய்வத் திருக்குறளும் பேசுகிறாய் தீமையைச்
செய்யும் மநுநூலும் சேர்த்தேன் பேசுகிறாய்
ஆங்கதன் மேலாய் இருக்குவேதச் சத்திரியம்
தீங்குவரப் பேசுகிறாய் எப்படிநீ ஏற்கிறாய்? 

தனித்தமிழ் என்கிறாய் அன்பிலாநால் வண்ணப்
பிணித்தமிழம் சொல்கிறாய் என்னநீ சொல்கிறாய்?
சட்டமாக உன்னைவந்துன் நாட்டிலே தாழ்த்திவைத்து
மட்டமாகச் சொல்லும் மநுநூல்தான் உன்நூலா?
ஒன்றுநீ செந்தமிழன் என்றுசொல்லு இல்லையென்றால்
நன்றுன்னை ஆரியச் சத்திரியன் என்றுசொல்லு!

தொண்டாளத் தேறாத தொண்டைமான் தோன்றலே
வன்னியத்தை கொள்கையாக வைப்பதாயின் முக்கழகத்
தண்டமிழை விட்டுநீ ஆரியத்தில் ஊன்றிநில்லு!
சண்டாளச் சாதியென்ற பட்டத்தை ஏந்திநில்லு!
 


No comments:

Post a Comment